தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு -300கிராம்
எண்ணெய்-50மில்லி
கடுகு-1தேக்கரண்டி
உளுந்து-1தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
துருவிய தேங்காய்-1தேக்கரண்டி
துருவிய கேரட்-1தேக்கரண்டி
பச்சை பட்டாணி-25 கிராம்
மஞ்சள் பொடி-ஒரு சிட்டிகை
நெய்- சிறிதளவு
அவல்-150 கிராம்
பச்சை மிளகாய்-4
முந்திரி-50 கிராம்
கொத்தமல்லி, கருவேப்பிலை-சிறிதளவு
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பட்டாணியை வேக வைத்து தனியாக வைக்கவும்.புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து சாற்றை வடிகட்டவும்.அதில் அவலைக் கொட்டி ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு மற்றும் உளுந்து போட்டு பொரிந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் ஊற வைத்த அவல்,வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். கலவையில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்றாக கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு சிறிது கொத்தமல்லி கருவேப்பிலையை தூவவும். இப்போது "தும்ப பூவா"தயாராகிவிட்டது.
ஒரு கிண்ணத்தில் தும்ப பூவாவை நிரப்பி, அதில் ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கவும். அதன் மீது வறுத்த முந்திரி, துருவிய கேரட், துருவிய தேங்காய் ஆகியவற்றை தூவி அலங்கரிக்கவும்.இது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றது.

0 கருத்துகள்