தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு- 2 கப்

பாசிப்பருப்பு-  2 கைப்பிடி

தேங்காய் துருவல் - அரை கப்

நாட்டு சர்க்கரை - அரை கப்

ஏலைகாய் - 4

உப்பு - தேவையான அளவு


செய்முறை

பாசிப்பருப்பை வாணலியில் போட்டு வறுத்து எடுக்கவும்.

வறுத்த பாசிப்பருப்பை குக்கரில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வந்ததும்  குக்கரை இறக்கி நீரை வடிகட்டி பருப்பை தனியாக  எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் கேழ்வரகு மாவை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் தனியாக வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் வெல்லைத்தை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.வெல்லம்  கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில்  வறுத்த கேழ்வரகு மாவு,வெல்லத் தண்ணீர், பாசிப்பருப்பு, தேங்காய்,ஏலக்காய் பொடி சேர்த்து மென்மையாக பிசைய வேண்டும்.


இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் சூடாவதற்குள் இட்லி தட்டில்  பிசைந்து வைத்துள்ள மாவை  கொழுகொட்டைகளாக  பிடித்து வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.சுவையான கேழ்வரகு புடி கொழுக்கட்டை ரெடி.